No products in the cart.
வணக்கம்.
நீலகிரி மாவட்டம் பென்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் (43 பழங்குடியின மாணவர்களுக்கு) ஈகை பவுன்டேஷன்ஸ்யின் வாயிலாக தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியினை செய்து வருகிறோம்.
தற்போது அங்கு பயிலும் மாணவர்கள் வனத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள். முதல் முறையாக கல்விச் சுற்றுலாவாக கோழிக்கோடு விமானநிலையம், கோளரங்கம், இரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளோம்.
இதன் மூலம் அவர்கள் ஓர் புது உலகை காண்பார்கள். இம்மாணவர்கள் செல்வதற்கான போக்குவரத்து, உணவு மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றிற்கு ஒரு நபருக்கு 800 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கல்வி ஆண்டு நிறைவடைவதாலும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்தச் சுற்றுலாவானது வரும் 5 ஏப்ரல் 2024, வெள்ளிக்கிழமை அன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இத்தருணத்தில் தங்களால் இயன்ற பண உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் அனைவரும் தலா ஒரு குழந்தைக்கான செலவை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.
நம்மைப் போன்று நகர் வாழ்க்கை பரிட்சயம் இல்லாத பிஞ்சுகளுக்கு நம் உதவியால் ஒரு நாள் மகிழ்ச்சியைப் பரிசளிப்போம். சின்னஞ்சிறு நெஞ்சங்களை குதூகலிக்கச் செய்வோம்.
தங்கள் பண உதவியை 9500093853 என்ற எண்ணுக்கு GPay செய்யலாம்.
அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யலாம்.
Gpay Number:- 9500093853
UPI ID:- eegaifoundations@okhdfcbank
Bank Details For Remittance
Bank Name : City Union Bank
Branch Name : CHITLAPAKKAM CHENNAI
Account Type: CUB SAVINGS A/C
Account Number(15 DIGIT) : 500101012223700
Account Holder Name : EEGAI FOUNDATIONS
IFSC CODE: CIUB0000295
தங்கள் கொடைக்கு 50% வரி விலக்கு உண்டு.
இப்படிக்கு
வெ. கண்ணன்,
நிறுவனர்,
ஈகை பவுன்டேஷன்ஸ், சிட்லபாக்கம்.
Eegai Foundations is a Non Government Organization encourages volunteering by creating opportunities for Volunteers to work with, mentor and empower the marginalized children, youth and women in the society.